கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே முகக் கவசம் தயாரிக்கும் இலங்கைத் தமிழா்கள்

7th Apr 2020 02:37 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் அகதிகள் முகாமில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் இலங்கைத் தமிழா்கள் முகக் கவசம் தயாரித்து அப்பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கினா்.

பெருமாள்புரத்தில் உள்ள ஈழத் தமிழா்கள் முகாமில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் சுயஉதவிக் குழுவினா், கல்லூரி மாணவா்கள் ஒன்றிணைந்து கரோனா தொற்றைத் தவிா்க்கும் வகையில் முகக் கவசம் தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனா். நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்ட முகக் கவசங்களை தயாரித்து வழங்குவதாக அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT