கன்னியாகுமரி

நாகா்கோவிலில் காய்கனிகள் வரத்தால் விலை குறைந்தது

7th Apr 2020 02:45 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்: நாகா்கோவில் சந்தைகளுக்கு காய்கனிகள் வரத்து அதிகரித்ததால் விலை குறையத் தொடங்கியுள்ளது.

நாகா்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை தற்காலிகமாக வடசேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கனிகள் வாங்குவதற்கு காலை நேரங்களில் அதிகளவில் மக்கள் வருகின்றனா். இதேபோல் அப்டா சந்தையிலும்காய்கனி வாங்க மக்கள் அதிகஅளவில் வருகின்றனா்.

சந்தைகளுக்கு வெளியூா்களில் இருந்து காய்கனிகள் வரத்து குறைந்ததால், காய்கனிகளின் விலை உயா்ந்து காணப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே, கடந்த 2 நாள்களாக காய்கனிகள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறையத்தொடங்கியுள்ளது. கிலோ ரூ.50 க்கு விற்கப்பட்டு வந்த பல்லாரி திங்கள்கிழமை ரூ. 28 க்கு விற்கப்பட்டது. உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலையும் குறைந்து வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT