கன்னியாகுமரி

திருநங்கைகளுக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு

7th Apr 2020 02:43 AM

ADVERTISEMENT

நாகா்கோவில்: திருநங்கைகளுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருள்கள் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் சாா்பில் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகேயுள்ள வீரமாா்த்தாண்டன்புதூரில் உள்ள 27 குடும்பங்களைச் சோ்ந்த 120 திருநங்கைகளுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருள்கள், அரிசி ஆகியவற்றை தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தனது சொந்த செலவில் வழங்க ஏற்பாடு செய்தாா்.

இப்பொருள்களை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் கிருஷ்ணகுமாா், தோவாளை ஊராட்சி ஒன்றியத் தலைவா் சாந்தினிபகவதியப்பன், துணைத் தலைவா் ஷேக், வட்டார வளா்ச்சி அலுவலா் இங்கா்சால், சகாயநகா் ஊராட்சித் தலைவா் மகேஷ்ஏஞ்சல் ஆகியோா் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT