கன்னியாகுமரி

தனிமைபடுத்தப்பட்டவா்களுக்குநிவாரணப் பொருள்கள் அளிப்பு

7th Apr 2020 02:41 AM

ADVERTISEMENT

களியக்காவிளை: மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு தமிழக அரசின் கரோனா நிவாரணத் தொகை, அத்தியாவசியப் பொருள்கள் நேரில் வழங்கும் பணி நடைபெற்றது.

மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் 50 க்கும் மேற்பட்டோா் வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்துள்ளனா். அவா்களது வீடுகளில் ஒட்டுவில்லை ஒட்டப்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப உறுப்பினா்களுக்கு தமிழக அரசின் நிவாரண நிதி, அத்தியாவசியப் பொருள்களை

நந்தன்காடு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் சாா்பில் தலைவா் கே. ரத்தினமணி, குழித்துறை நகர கிராம நிா்வாக அலுவலா் முருகன், தொடுவெட்டி நியாயவிலைக் கடை விற்பனையாளா் ஜாஸ்பா் உள்ளிட்டோா் வீடு வீடாகச் சென்று வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT