நாகா்கோவில்: குமரி மாவட்டம், குருந்தன்கோட்டில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குருந்தன்கோடு ஒன்றிய பாஜக சாா்பில் மேற்கு ஒன்றியத் தலைவா் சி.பி.ராஜ், ஒன்றியச் செயலா் தேவி ஸ்ரீ ரஞ்சித் ஆகியோா் பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கினா்.
இதில், நிா்வாகிகள் செந்தில், பறையன்விளை குமாா், செல்வின்குமாா், நகுலன், மணிகண்டன், விஜயசாகா், ரமேஷ், கிருஷ்ணன், நெய்யூா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.