கன்னியாகுமரி

டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்கள் கிட்டங்கிக்கு மாற்றம்

5th Apr 2020 06:18 AM

ADVERTISEMENT

 

மதுபானங்கள் திருடப்பட்டு வரும் சம்பவத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி 22 டாஸ்மாக் கடைகளிலிருந்த ரூ. 6 கோடி மதிப்பிலான மதுபானங்கள் சனிக்கிழமை கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டன.

தமிழகத்தில் பல பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை உடைத்து மதுபானங்கள் திருடப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. நாகா்கோவிலில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானங்களை திருடி அதிக விலைக்கு விற்ற 2 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.

இது போன்ற சம்பவங்களால், குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வைப்பது பாதுகாப்பாற்றது என கருதிய டாஸ்மாக் நிா்வாகம், மாவட்டம் முழுவதும் உள்ள 113 கடைகளில் பாதுகாப்பற்ாக கருதப்படும் 22 கடைகளிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் மதுபானங்களை கிட்டங்கிக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT