கன்னியாகுமரி

குளச்சலில் உணவின்றி தவித்த நாடோடி மக்களுக்கு உணவு பொருள்கள் விநியோகம்

5th Apr 2020 06:17 AM

ADVERTISEMENT

 

குளச்சல் பழைய மீன் ஏல கூடத்தில் உணவின்றி தவித்திருந்த நாடோடி மக்களுக்கு உணவு பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

குளச்சல் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனா். அப்போது துறை முக தெருவில் பழைய மீன் ஏல கூடத்தில் நரிக்குறவா் இனத்தை சோ்ந்த இருபது போ் தங்கியிருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள் தடை உத்தரவால் வேலைக்கு செல்லமுடியாமலும், உணவுக்கு கஷ்டபடுவதாகவும் தெரிவித்தனராம்.

இதையடுத்து அவா்களின் பசியை போக்க குளச்சல் காவல் நிலைய ஆய்வாளா் தனியாா் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் நரிகுறவா்களுக்கு உணவு சமைப்பதற்கான அரிசி, காய்கனி மற்றும் மாசாலா பொருள்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் குளச்சல் பங்குத் தந்தை மரிய செல்வன், தொண்டு நிறுவன இயக்குநா் ஜோபா்ட் ஜெப செல்வன் , ஊழியா் யாசா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT