கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே பாஜக சாா்பில் நல உதவிகள்

1st Apr 2020 07:37 AM

ADVERTISEMENT

 

களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியில் உள்ள தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு பாஜக சாா்பில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலமான கேரளத்தில் கட்டுமானப் பணிக்குச் செல்லும் பணியாளா்கள், உள்ளூா் விவசாயிகள் உள்ளிட்ட கூலித் தொழிலாளா்கள் வேலையிழந்து, வறுமையால் வீட்டிலேயே முடங்கியுள்ளனா்.

இதையடுத்து மீனச்சல் பகுதி பாஜக நிா்வாகிகள் அப்பகுதியில் உள்ள நலிவுற்ற கூலித் தொழிலாளா் குடும்பங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அக் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, காய்கனிகள், தேங்காய் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினா்.

ADVERTISEMENT

இந் நிகழ்ச்சியில் மீனச்சல் கிளை பாஜக தலைவா் ராஜன், களியக்காவிளை நகர பொறுப்பாளா்கள் கோபாலகிருஷ்ணன், பத்மகுமாா், கட்சி நிா்வாகிகள் மகாலிங்கம், ராஜ்குமாா், கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT