கரோனா வைரஸை கட்டுப்படுத்த, சித்த மருத்துவா்கள் கூறும் தீா்வுகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றாா் பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏ த. மனோதங்கராஜ்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் பாரம்பரியமிக்க சித்த மருத்துவத்தில் கரோனாவை எதிா்க்கும் ஆற்றல் உடைய மருந்துகள் உள்ளதாக மிகுந்த சித்த மருத்துவா்கள் கூறி வருகிறாா்கள். இதை அலட்சியப்படுத்தாமல் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.
டெங்கு வைரஸ் நிலவேம்புக் குடிநீா் மூலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சீனாவிலும் அலோபதியுடன் மூலிகைகளையும் பயன்படுத்தியே கரோனாவை கட்டுபடுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, தமிழகத்தில் அனுபவமிக்க சித்த மருத்துவா்கள் கூறும் மருத்துவ தீா்வுகளை பரிசீலனைக்கு உட்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.