தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மார்த்தாண்டம் சிட்டி அரிமா சங்கம், தேசிய பசுமைப் படை ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஜோஸ்வின் தலைமை வகித்தார். அரிமா சங்கம் சார்பில் மாணவர், மாணவிகள் அனைவருக்கும் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை அரிமா சங்கத் தலைவர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தேசிய பசுமைப் படைச் செயலர் டேனியல் பொன்னப்பன், பொருளாளர் அசோக்குமார், அரிமா சங்க முன்னாள் தலைவர் பேராசிரியர் தேவகுமார் சாமுவேல், ஆசிரியர் கிருஷ்ணமணி, நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் கபேரியல்ராஜ், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.