கன்னியாகுமரி

மார்த்தாண்டத்தில் தேனீ வளர்ப்போர் உண்ணாவிரதம்

10th Sep 2019 07:12 AM

ADVERTISEMENT

தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுகளை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் தேனீ வளர்ப்போர் சங்க உறுப்பினர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகளை எரித்த குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்;  இந்த வழக்கு விசாரணையை மத்திய குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்; சங்கத்தின் காவலாளி கனகராஜ் தற்கொலை குறித்து விசாரிப்பதுடன், அவரது இறப்புக்கு காரணமானவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சங்க உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பாளர் எஸ். ஆமோஸ் தலைமை வகித்தார். சங்கத்தின் முன்னாள் தலைவர் சி. சாத்ராக், முன்னாள் துணைத் தலைவர் சி. தங்கப்பன், உறுப்பினர்கள் டி. ஜாண்ரோஸ், இ.கே. சுந்தரம், இ. வேதராஜ், ஆர். சுந்தரம், ஏ. கமலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  போராட்டத்தை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார்  தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் ஏ. சாலின், வழக்குரைஞர் கே. மைக்கிள்குமார், பாகோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் சி. மோகனதாஸ், காமராஜ் பசுமை பாரதம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர். கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஹெச். வசந்தகுமார் எம்.பி. போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினார். இதில், சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT