கன்னியாகுமரி

முன்சிறையில் கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டடம் திறப்பு

7th Sep 2019 07:32 AM

ADVERTISEMENT

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒய்.45 பார்த்திபபுரம் முன்சிறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ. 20 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இதையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினார். செயலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கன்னியாகுமரி மண்டல இணைப் பதிவாளர் குருமூர்த்தி கட்டடத்தை திறந்துவைத்துப் பேசினார். சங்க சட்ட ஆலோசகர் பிரதாப், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொதுமேலாளர் முருகேசன், பா.ஜ.க. மாவட்ட முன்னாள் தலைவர் தர்மராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், சங்க துணைத் தலைவர் மகேஷ், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சுகுமாரன், ஓமனா,வித்யா, கருணாகரன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT