கன்னியாகுமரி

நாகர்கோவிலில் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

7th Sep 2019 10:46 AM

ADVERTISEMENT

கேரளத்துக்கு கடத்துவதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், பறக்கும் படை வட்டாட்சியர் சதானந்தன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகளை சோதனையிட்டனர். அதில், ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. 
இதைத் தொடர்ந்து மூட்டைகளில் இருந்த சுமார் 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கோணம் அரசு கிடங்கில் ஒப்படைத்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT