கன்னியாகுமரி

திருவட்டாறில் பெண்ணை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

7th Sep 2019 07:30 AM

ADVERTISEMENT

திருவட்டாறில் பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் மனு அளிக்கப்பட்டது.
  இது குறித்து, மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், வட்டாரத் தலைவர் சுசீலா, மாவட்ட நிர்வாகி எஸ்தர், பாதிக்கப்பட்ட பெண் ரெஜினாள், அவரது குடும்பத்தினர் மற்றும்  மார்க்சிஸ்ட்  மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ரவி, வட்டாரச்  செயலர் வில்சன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு: , திருவட்டாறு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொல்வேல் பகுதியில் ரெஜினாள் (60)  தனது 97 வயதான தாயுடன் வசித்து வருகிறார்.   கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி  அதே பகுதியைச் சேர்ந்த ஆர்.ஜஸ்டின்  அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து ரெஜினாளை அடித்து, ஆபாச  வார்த்தைகளால் திட்டி,  தாக்கியுள்ளார். ரெஜினாள் தும்பகோடு அரசு மருத்துவமனையில் இருக்கும்போது திருவட்டாறு காவல் துறையினர் அவரை பார்த்து விசாரித்து ரெஜினாளிடமிருந்து புகார்மனு பெற்றுள்ளனர். ஆனால் இதுவரையிலும் காவல் துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 
எனவே ரெஜினாளை அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கிய ஆர்.ஜஸ்டின் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT