கன்னியாகுமரி

திருவட்டாறில் செப்.20 இல் மோசடி நிதி நிறுவன சொத்துகள் ஏலம்

7th Sep 2019 07:34 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தின் சொத்துகள் வரும் 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவட்டாறில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு வட்டம் வேர்க்கிளம்பியில் ஜெனித் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று திரும்ப வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக, இந்த  நிதி நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான மேக்கோடு (தற்போது குமரன்குடி) கிராமத்திலுள்ள அசையா சொத்துகளை  செப். 20 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலரால்  திருவட்டாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் நடத்தப்பட உள்ளது. 
ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் சொத்துக்களின் விவரம், ஏலத்தில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பப் படிவம் போன்றவற்றை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT