கன்னியாகுமரி

சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம்:  செப்.12இல் கருத்துக் கேட்புக் கூட்டம்

7th Sep 2019 07:32 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் வன உயிரின சரணாலயத்தை சுற்றி அமைக்கப்பட உள்ள சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் செப்.12ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் எஸ்.ஆனந்த்  வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தின் வனப்பகுதிகள் கன்னியாகுமரி வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு சரணாலயத்தை சுற்றிலும் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் அறிவுறுத்துகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி வன உயிரின சரணாலயத்திற்கு சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் எனப்படும் உஸ்ரீர் ள்ங்ய்ள்ண்ற்ண்ஸ்ங் க்ஷ்ர்ய்ங்   நிர்ணயிக்கப்படவுள்ளது. 
  வனப்பகுதிக்கு அருகே உள்ள மக்கள் வாழும் பகுதிகள் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலமாக அறிவிக்கப்படவுள்ளதால் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முறைப்படுத்துவதும்,  அதனால் சரணாலயப் பகுதிக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை குறைப்பதும், தவிர்ப்பதும் இம்மண்டலத்தின் நோக்கமாகும்.  இதன் மூலம் மக்கள் வாழும் பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த வழிவகுக்கும். 
  கன்னியாகுமரி வன உயிரின சரணாலயத்திற்கு சூழலியல் அதிர்வு தாங்கு மண்டல உத்தேச எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. 
இம்மண்டலத்தில், கடையால், திற்பரப்பு, தும்பகோடு, பொன்மனை,சுருளகோடு, அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, சிறமடம், வேளிமலை, அனந்தபுரம், அழகியபாண்டியபுரம், செண்பகராமன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி, தேரூர், மருங்கூர்,    குலசேகரபுரம் ஆகிய  17 கிராமங்கள் அடங்கும்.
  இந்த  கிராம மக்களிடம் இம்மண்டலம் அறிவிப்பது தொடர்பாக, கருத்து கேட்புக் கூட்டம்  செப். 12 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில்  முற்பகல் 11 மணிக்கு நடைபெற  உள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, மக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம். அதனடிப்படையில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தில் எல்லை நிர்ணயிக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைகள்அனுப்பப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்: இந்நிலையில் மாவட்ட வன அதிகாரியின் அறிவிப்பு தொடர்பான  ஆலோசனைக் கூட்டம் குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள்   சங்கம் சார்பில் குலசேகரத்தில்,  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தலைவர்  எஸ். நெல்சன், செயலர் சி. பாலசந்திரன் நாயர், பொருளாளர் தோமஸ்  மற்றும் நிர்வாகிகள்  ஏ. அகஸ்டின்,  கேசவன் குட்டி, பத்மநாபன் நாயர்,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைவதால்  மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும்  செப். 12 ஆம் தேதி  வரையறை செய்யப்பட்டுள்ள  ஒவ்வொரு வருவாய் கிராம மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் திரண்டு   சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்கு எதிராக   தங்களின்  கருத்துத் தெரிவிக்க முன் வர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப் பட்டது.  
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT