கன்னியாகுமரி

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையே டென்னிஸ் போட்டி: நாகர்கோவிலில் செப்.19இல் தொடக்கம்

7th Sep 2019 07:31 AM

ADVERTISEMENT

தென்னிந்திய அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான டென்னிஸ் போட்டிகள் நாகர்கோவிலில் வருகிற 19 ஆம் தேதி முதல் 4 நாள்கள் நடைபெறுகிறது. 
இதுகுறித்து போட்டியின்  ஒருங்கிணைப்பாளர்களான நாகர்கோவிலைச் சேர்ந்த லதா குமாரசுவாமி, சென்னையைச் சேர்ந்த சிவகுமார் பழனி ஆகியோர்  நாகர்கோவிலில்  வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான டென்னிஸ் போட்டிகள் வருகிற 19  ஆம் தேதி தொடங்கி  22 ஆம் தேதி வரை நாகர்கோவில் பயோனியர் பள்ளியில் நடைபெறவுள்ளது. 
இதில், 17 வயதுக்குள்பட்டவர்கள் மற்றும் 19 வயதுக்குள்பட்டவர்கள் என இரு பிரிவில் ஆண், பெண் என இரு தரப்பினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற உள்ளன.
 போட்டிகளில் 170 பள்ளிகளைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் பங்கேற்கின்றனர். மேலும், தமிழகத்தில் சென்னைக்கு வெளியே முதல் முறையாக நாகர்கோவிலில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்  என்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT