கன்னியாகுமரி

குமரி முக்கடல் சங்கமத்தில் 78 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

7th Sep 2019 07:34 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 78 விநாயகர் சிலைகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் வெள்ளிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
   விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவசேனா சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் நாகர்கோவில் நாகராஜா திடலுக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
  தொடர்ந்து,  மாநில சிவசேனா பொதுச் செயலர் ஏ.பி.ராஜன்,  தேசிய அமைப்பாளர் எஸ்.அண்ணாமலை,  மாவட்டத் தலைவர் ஜெயராஜன்,  பொதுச் செயலர் பா.ராஜன், மாவட்டச் செயலர் ஜெயமனோகர்,  கன்னியாகுமரி நகரத் தலைவர் சி.எஸ்.சுபாஷ் ஆகியோர் முன்னிலையில் சிலைகள் ஒவ்வொன்றாக கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT