கன்னியாகுமரி

கீழமூலச்சல் ஆற்றில் குளிக்கச் சென்ற பட்டதாரி  மாணவர் மாயம்

7th Sep 2019 07:34 AM

ADVERTISEMENT

தக்கலை அருகே கீழ மூலச்சல் ஆற்றில் குளிக்க  சென்ற போது மாயமான பட்டதாரி மாணவரை  தீயணைப்பு படையினர், போலீஸார் மற்றும் உறவினர்கள் தேடி வருகின்றனர். 
தக்கலை அருகே கல்குறிச்சியை சேர்ந்தவர் ஜார்ஜ் இவரது மனைவி சைலஜா இருவரும் வேளாங்கண்ணியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். கல்குறிச்சியில் உள்ள சொந்த வீட்டில் பணி நடைபெற்று வருவதால்  இவர்களது மகன் பி.இ. பட்டதாரி சஜித் (23)  கீழமூலச்சலில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கிருந்து  வீட்டின் பணிகளை கவனித்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரு சக்கரவாகனத்தில்  குளிப்பதற்காக  கீழமூலச்சல் ஆற்றுக்கு வந்துள்ளார்.  இருசக்கரவாகனத்தையும், துணியையும்  கரையில்  வைத்துகொண்டு  ஆற்றில் குளிக்க சென்றாராம். 
 இந்நிலையில்,  குளிக்க சென்ற சஜித் வீடு திரும்பாததால் உறவினர்கள்  ஆற்றுக்கு வந்த பார்த்தபோது,   அவர் அணிந்திருந்த ஆடையும்,  இரு சக்கரவாகனமும்  ஆற்றின் கரையில் இருந்ததாம். இதையடுத்து  உறவினர்கள் தீயணைப்புதுறைக்கும்,  தக்கலை காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
   தீயணைப்பு  நிலைய அலுவலர் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு  மீட்புப் படையினர்  ஆற்றின் கரையோர பகுதிகளிலும், ஆற்றின் வழியே சென்று பல இடங்களில் தேடியும்  வெள்ளிக்கிழமை இரவு 8 மணிவரை  தேடியும்  சஜித்தை கண்டுபிடிக்கமுடியவில்லை.  இதுகுறித்து தக்கலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT