கன்னியாகுமரி

என்.ஐ. பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறை

7th Sep 2019 07:33 AM

ADVERTISEMENT

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில்  தடய அறிவியல் துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி  பட்டறை  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணை வேந்தர் மாணிக்கம் தலைமை வகித்தார்.   குமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத்  குத்துவிளக்கேற்றி  பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்தார்.  
இணை வேந்தர்  பெருமாள்சாமி  பட்டறையில் கலந்துகொண்ட  நிபுணர்களை அறிமுகம் செய்து வைத்தார்.  பதிவாளர் திருமால்வளவன் வாழ்த்திப் பேசினார்.  
இந்த பயிற்சி பட்டறையில்  கேரள மாநிலம்  திருச்சூர்  காவல் தடவியல் ஆய்வக துணை இயக்குநர் அப்துல்ரசாக், திருவனந்தபுரம் காவல் தடயவியல்  ஆய்வக துணை இயக்குநர் உன்னிகிருஷ்ணன்,  கேரள காவல்  அகாதெமி  முன்னாள் துணை இயக்குநர் மோகனன்  ஆகியோர்  குற்ற அறிவியல் விசாரணை,  தடய அறிவியல் விசாரணை,   கைரேகை  ஆகியவை குறித்து  விளக்கம் மற்றும் செய்முறைகளை  விளக்கினர்.  பயிற்சி பட்டறை அறிக்கையை  பேராசிரியர்  ஜானகி சமர்ப்பித்தார்.
  நிறைவு நிகழ்ச்சியில் ,  பயிற்சி பட்டறையில்  பங்கேற்ற  மாணவர்களுக்கு  பல்கலைக்கழக வேந்தர் ஏ.பி.மஜீத்கான் சான்றிதழ்களை வழங்கினார்.  இதில்,  மாணவர்களும், குமரி மாவட்ட  தடவியல் நிபுணர்களும்  கலந்து கொண்டனர்.   சுகாதார தொடர்பு  அறிவியல்துறை  ஒருங்கிணைப்பாளர்  ஆரோக்ய செல்வ சரோஜா வரவேற்றார். பேராசிரியர் அருண்ஜேம்ஸ்  நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT