கன்னியாகுமரி

பி.எஸ்.என்.எல். இலவச 4 ஜி சிம் மேளா

4th Sep 2019 09:40 AM

ADVERTISEMENT

கருங்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து இலவச 4 ஜி சிம் வழங்கும் மேளா நடைபெற்று வருகிறது.
நாகர்கோவிலில் முதல் கட்டமாக 51 கோபுரங்கள் மூலம் 4 ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, மார்த்தாண்டம், கருங்கல் உள்ளிட்ட பகுதிகளில் 127 செல்லிடப்பேசி கோபுரங்களில் 4ஜி தொழில்நுட்பப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
எனவே, இப்பகுதிகளில் 4 ஜி சேவை விரைவில் தொடங்கும் வகையில், வாடிக்கையாளர்கள் 3 ஜி சிம்களை  4ஜிக்கு மாற்றுவதற்காக நடைபெறும் இந்த இலவச சிம் வழங்கும் மேளாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT