கன்னியாகுமரி

பளுகல் அருகே காரில் கஞ்சா கடத்தல்: கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது

4th Sep 2019 09:39 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம்,  பளுகல்  அருகே காரில் கஞ்சா கடத்தியதாக, கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து,  3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
பளுகல் காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலையில் மேல்பாலை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி, அதிலிருந்த 5 பேரிடம் விசாரித்தனர். அதில்,  3 பேர் கல்லூரி மாணவர்கள் என்பதும், 3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், 5 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT