கன்னியாகுமரி

நாகர்கோவிலில் பேருந்து- பைக் மோதல்: கல்லூரி மாணவர் பலி

4th Sep 2019 09:39 AM

ADVERTISEMENT

நாகர்கோவில் பெருஞ்செல்வவிளை அருகே பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 
நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் பம்பானூர் திட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆசீர் செல்வன் மகன் சஜின்ஷாம் (17). இவர் , மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார் . திங்கள்கிழமை இரவு சஜின்ஷாம் , தனது இருசக்கர வாகனத்தில் பெருஞ்செல்வவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்தும், இவரது வாகனமும் எதிர்பாராமல் மோதிக்கொண்டவனாம்.
இதில், பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சஜின் ஷாம் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து   வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT