கன்னியாகுமரி

நாகர்கோவிலில் பிஎஸ்என்எல்  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

4th Sep 2019 09:38 AM

ADVERTISEMENT

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளத்தை தாமதமின்றி வழங்க வேண்டும், ஊழியர்களை விருப்ப ஓய்வில் பணி விலக கட்டாயப்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஜார்ஜ் தலைமை வகித்தார். 
மாவட்டச் செயலர் பி.ராஜூ, மாவட்டப் பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். இதில், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுயம்புலிங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT