கன்னியாகுமரி

நாகர்கோவிலில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்

4th Sep 2019 09:41 AM

ADVERTISEMENT

குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு,  மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில்,  "பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை செப்.17இல் மாவட்டம் முழுவதும், கட்சிக்கொடியேற்றி வைத்து, ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கி கொண்டாடுவது; காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மக்களுக்கு விளக்குவது; பாஜக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இதில், மாநில துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி, கோட்ட அமைப்புச் செயலர்கள் கணேசன், தர்மராஜ், வேல்பாண்டியன், மாவட்டப் பார்வையாளர் தேவ், பொருளாளர் தர்மலிங்க உடையார், மாவட்ட துணைத் தலைவர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT