கன்னியாகுமரி

தக்கலை கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்

4th Sep 2019 09:39 AM

ADVERTISEMENT

தக்கலை கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா  வடசேரி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, தக்கலை கல்வி மாவட்டம்,  ராஜாக்கமங்கலம்  மண்டல அளவில் அனைத்துப் பள்ளிகளுக்கு இடையிலான  விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.  வெள்ளிச்சந்தை அருணாச்சலா  மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி  பொறுப்பேற்று நடத்திய இவ்விழாவை, அந்தக் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கிருஷ்ணசுவாமி  தேசிய கொடியை ஏற்றி தொடக்கிவைத்தார். கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் தலைமை வகித்து,  ஓலிம்பிக்  கொடியை ஏற்றினார். மாவட்ட விளையாட்டு  கல்வி ஆய்வாளர் ஜெபராஜ் மண்டல கொடியை ஏற்றிவைத்தார். உடற்கல்வி ஆசிரியர் பஸ்காரியாஸ் முன்னிலை வகித்தார். அருணாச்சலா  மகளிர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஜோசப் ஜவகர்  ஒலிம்பிக் தீபம் ஏற்றினார்.
இவ்விழாவையொட்டி,  அருணாச்சலா  பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அருணாச்சலா  பள்ளியின் முதல் லிஜோமோள்  ஜேக்கப்  வரவேற்றார்.  உடற்கல்வி ஆசிரியர்  ரெத்தினம்  நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT