கன்னியாகுமரி

சாமிதோப்பில் 3 மாத தென்னங்கன்றில் தேங்காய்

4th Sep 2019 09:38 AM

ADVERTISEMENT

சாமிதோப்பு தோட்டக்கலை நர்சரியில் மூன்றே மாதத்தில் தென்னங்கன்று காய்த்ததை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
 கன்னியாகுமரியை அடுத்த சாமிதோப்பில் மரக்கன்றுகள், பூச்செடிகள், பழச்செடிகள் விற்பனை செய்யும் நர்சரி தோட்டம் உள்ளது. இங்கு, சுமார் 500க்கும் மேற்பட்ட செடி வகைகள் உள்ளன. இதை இப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர், கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இங்கு குறைந்த நாள்களில் காய்க்கும் ஒட்டு ரக மரங்களை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். 
 இந்நிலையில், 3 வருடத்தில் காய்க்கும் ஒட்டு ரக தென்னங்கன்றுகளை கடந்த 3 மாதத்துக்கு முன்பு ராஜசேகர் நடவு செய்தார். இதில் ஒரு தென்னங்கன்று குலைத்து காய்க்க ஆரம்பித்துள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள், அபூர்வ தென்னங்கன்றை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். 
 இதுகுறித்து நர்சரி உரிமையாளர் ராஜசேகரிடம் கேட்டபோது, இது ஒரு ஆச்சரியமான நிகழ்வு என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT