கன்னியாகுமரி

குமரியில் 11 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

4th Sep 2019 09:40 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சென்னையில் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
முன்னாள் குடியரசு தலைவரும், ஆசிரியருமான சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான  செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல்வித் துறையில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 
அதன்படி,   குமரி மாவட்டத்தில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு 11 ஆசிரியர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். 
கடியப்பட்டணம், அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதாபாய், வடிவீஸ்வரம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெராபின் பிளவர்குயின்,  வேங்கோடு வடக்கு அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செராபின் புஷ்பமேரி,  சொத்தவிளை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அகிலா,  ஈத்தாமொழி அரசு தொடக்கப் பள்ளி தலைமை  ஆசிரியை விமலாமேரி,  நாகர்கோவில் ஹோம் சர்ச் பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சி லதா,  அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி பயிற்றுநர் கிறிஸ்டோபர் தங்கராஜ்,  கண்டன்விளை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார்,  கடையால், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணதாஸ்,  தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் (வேளாண் அறிவியல்) டேனியல் பொன்னப்பன், பொன் ஜெஸ்லி பப்ளிக்  பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பியர்லின் ஆகிய 11 பேர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT