கன்னியாகுமரி

குமரியில் வழக்குரைஞர்கள் போராட்டம்

4th Sep 2019 09:40 AM

ADVERTISEMENT

வாகன விபத்துக் காப்பீடு இழப்பீட்டுத் தொகை, மாதத் தவணை முறையில் பயனாளிக்கு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெறக் கோரி, குமரி மாவட்டத்தில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 
 நாகர்கோவில், பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி உள்ளிட்ட நீதிமன்றங்களில் சுமார் 2,500 வழக்குரைஞர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். காப்பீடு நிறுவனங்கள் திவாலானால் மக்கள் இழப்பீடுகள் கிடைக்காமல் திண்டாடும் நிலையை மத்திய அரசின் இந்த உத்தரவு உருவாக்கிவிடும் என வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT