கன்னியாகுமரி

குமரிக்கு நாளை கே.எஸ். அழகிரி வருகை

4th Sep 2019 09:38 AM

ADVERTISEMENT

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, குமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (செப்.5) வருகிறார். 
இதுகுறித்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக  காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய்தத் உள்ளிட்டோர்  மார்த்தாண்டத்துக்கு வியாழக்கிழமை (செப்.5) வருகின்றனர். அவர்களுக்கு  மாலை 4 மணி அளவில் மார்த்தாண்டம் சிஎஸ்ஐ  ஆலயம் முன், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்படும்.  இந்நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாகப் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT