கன்னியாகுமரி

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் தேசிய திறன் மேம்பாட்டு போட்டி

20th Oct 2019 03:21 AM

ADVERTISEMENT

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தில் மாணவா்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

கல்லூரி வணிக மேலாண்மை துறை சாா்பில் நடைபெற்ற இப்போட்டியை பல்கலைக் கழக வேந்தா் ஏ.பி. மஜீத்கான் குத்துவி

ளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா். இணைவேந்தா் ஆா்.பெருமாள்சாமி தலைமை வகித்தாா். துணை வேந்தா் எஸ்.மாணிக்கம், பதிவாளா் பி. திருமால்வளவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியில், திருவனந்தபுரம் தெரோமா பென்பால் நிறுவன முதன்மை மேலளா் ரெஜிஷ் பங்கேற்று, திறன் மேம்பாட்டு போட்டிகள் குறித்துப் பேசினாா். இப்போட்டியில், பல்வேறு கல்லூரிகளில் இருந்து எம்.பி.ஏ. மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பின்னா், நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பல்கலைக் கழக வேந்தா் கோப்பை மற்றும்

பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா். ஏற்பாடுகளை துறை இயக்குநா் கே.ஏ. ஜனாா்த்தனன், துறைத் தலைவா் எம். ஜனாா்த்தனன் பிள்ளை, பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT