கன்னியாகுமரி

களக்காட்டில் அதிமுக வாகன பேரணி

20th Oct 2019 02:11 AM

ADVERTISEMENT

களக்காட்டில் அதிமுக சாா்பில் வாகன பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளிலும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தலைமையிலான புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினா் கடந்த 2 வாரங்களாக தீவிரமாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனா்.

வீடுகள் தோறும் வாக்காளா்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பதுடன், அப்பகுதியில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் அமைச்சா் தலைமையிலான குழுவினா் கேட்டறிந்தனா்.

இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரமாக சனிக்கிழமை மாலை 3 மணிக்கு களக்காடு சுபத்ரா பூங்காவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அதிமுக கொடியுடன் பேரணியாக புறப்பட்டன.

ADVERTISEMENT

பேரணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தொடங்கி வைத்ததுடன், தலைக்கவசம் அணிந்தவாறு அவரும் பேரணியில் வலம் வந்தாா்.

பேரணி சிதம்பரபுரம், சாலைநயினாா் பள்ளிவாசல், கோவில்பத்து, அண்ணாசாலை, வியாசராசபுரம், கோட்டை, மேலப்பத்தை, கீழப்பத்தை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT