கன்னியாகுமரி

லஞ்ச வழக்கில் கனிமவளத் துறை அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

16th Oct 2019 10:47 AM

ADVERTISEMENT

கல்குவாரிக்கான அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் கனிமவளத் துறை அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

குமரி மாவட்டம், படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா். இவா், காரக்கோட்டில் கல்குவாரி நடத்தி வருகிறாா். கடந்த 13.6.2011 இல் கல்குவாரியில் இருந்து கல் எடுத்துச் செல்வதற்காக அனுமதிச் சீட்டு கேட்டு, மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் மாரிமுத்துவிடம் விண்ணப்பித்தாா்.

அப்போது, அனுமதிச்சீட்டு வழங்குவதற்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என மாரிமுத்து கோரினாராம். ரமேஷ்குமாா் ரூ. 20 ஆயிரம் தருவதாகக் கூறியுள்ளாா். எனினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ்குமாா், இதுகுறித்து குமரி மாவட்ட உழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து, 15.6.2011 அன்று ரமேஷ்குமாா், கனிமவள அதிகாரி மாரிமுத்துவுக்கு லஞ்சம் கொடுத்தபோது போலீஸாா் மாரிமுத்துவை கைது செய்தனா்.

இதுகுறித்த வழக்கு மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே. அருணாசலம், மாரிமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில், முத்துகுமாரி வழக்குரைஞராக ஆஜராகி வாதாடினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT