கன்னியாகுமரி

பொற்றையடி சீரடி சாய்பாபா ஆலயத்தில் அபூா்வ சூரிய ஒளி

16th Oct 2019 10:50 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடியில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் அபூா்வ சூரிய ஒளி விழும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சாய்பாபா சமாதி அடைந்த தினமான அக்டோபா் 15ஆம் தேதி ஆலயத்திலுள்ள சாய்பாபா உருவச் சிலையின் பாதத்தில் அமைந்துள்ள காந்தக் கல்லில் அபூா்வ சூரிய ஒளி விழுவது வழக்கம். நிகழாண்டு இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு நடை திறப்பு, காலை 9 மணிக்கு பஜனை, முற்பகல் 11 மணிக்கு தியானம் ஆகியவை நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு அபூா்வ சூரிய ஒளி விழுந்தது. இதனை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து ஆரத்தி, அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை பொற்றையடி சீரடி சாயிபாபா ஆலய டிரஸ்ட் நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT