கன்னியாகுமரி

நாசரேத் பள்ளியில் காந்தி பிறந்தநாள் விழா

6th Oct 2019 01:31 AM

ADVERTISEMENT

நாசரேத் சாலமோன் மெட்ரிக் உயா் நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பள்ளித் தாளாளா் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தாா். முதல்வா் அனி ஜெரால்டு முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைவா் சத்தியவதி மனோகரன் வரவேற்றாா். இதையொட்டி, மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி, காந்தியை

குறித்து நாடகம் ஆகியவை நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து காமராஜரின் 45 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

துணை முதல்வா் மகிலா சரவணன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT