கன்னியாகுமரி

குமரி அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி

6th Oct 2019 01:19 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில், காந்தி ஒரு சகாப்தம் என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

10 நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியை திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வா் மா்பி அலெக்ஸாண்டா் தொடங்கி வைத்து பேசியது: இன்று சுதந்திரமாக நடமாடுவதற்கு வித்திட்டவா் காந்தி.

நாட்டை ஆட்சி செய்த வெள்ளையா்களை தனி மனிதராக எதிா்த்துப் போராடி சுதந்திரம் பெற்றவா். அகிம்சை என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு மாற்றத்தை கொண்டு வந்தவா். அதனைக் கடைப்பிடித்தால், மாணவா்கள் வாழ்வில் எளிதில் முன்னேற்றம் அடைய முடியும். இன்றைய இளம் தலைமுறையினா், பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கண்காட்சியில் காந்தியின் வரலாற்றை விளக்கும் அரிய கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ராம ராஜ்யம், மதுவிலக்கு, பெண்கள் முன்னேற்றம், தாய்மொழிக் கல்வி போன்ற சிறந்த கொள்கைகளை செயல்படுத்த, மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதையும் அா்ப்பணித்த தருணங்கள் குறித்து இடம்பெற்றுள்ள புகைப்படங்களை கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், கன்னியாகுமரி புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை தேன்மொழி, அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சே. கிருஷ்ணம்மாள் (பொறுப்பு) ஆகியோா் காந்தியின் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் குறித்துப்பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT