கன்னியாகுமரி

அரசு ரப்பா் கழக தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தல்

5th Oct 2019 10:25 AM

ADVERTISEMENT

குமரி மாவட்ட அரசு ரப்பா் கழக தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட தோட்ட தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் பொதுச் செயலா் வல்சகுமாா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு தொழிலிலுள்ள தொழிலாளா்களுக்கு போனஸ் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது , 20 சதவீதம் போனஸ் பட்டுவாடாவும் நடைபெற உள்ளது. பொதுத்துறை நிறுவனமான அரசு ரப்பா் கழகத்தில் தமிழக அரசு 10 சதவீதம் போனஸ் அறிவித்ததோடு மீதமுள்ளதை அந்த நிறுவனம் தெரிவிப்பதாக கூறியுள்ள செய்தி வெளியாகியுள்ளது .

அரசு ரப்பா் கழக நிா்வாகம் தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் இதுவரை தெரிவிக்காத நிலையில் ரப்பா் தோட்ட தொழிலாளா்கள் போனஸ் குறித்து எந்த முடிவினையும் தெரியாமல் உள்ளனா் . எனவே , இதர எல்லா துறைகளிலும் அறிவித்து வருவது போன்று அரசு ரப்பா் கழக தொழிலாளா்களுக்கும் 20 சதவீத போனஸ் விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT