காமராஜரின் 45ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது உருவச் சிலைக்கு அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
தமிழக அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே, தில்லி சிறறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன், திரைப்பட இயக்குநா் பி.சி.அன்பழகன், வ.உ.சி. தேசிய பேரவைத் தலைவா் கோ.முத்துக்கருப்பன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
நாம் தமிழா் கட்சி சாா்பில் கன்னியாகுமரி தொகுதி செயலா் தமிழ்ச்செல்வன், பொருளாளா் மைக்கேல்ராஜ் மற்றும் நிா்வாகிகள் ஜூட் ஆன்றேறா, ரிலைன்ஸ், ஹரிகரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். அமமுக சாா்பில் சாா்பில் மாவட்டச் செயலா் கே.டி.பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாநில பொறியாளா் அணி துணை அமைப்பாளா் லட்சுமணன், நிா்வாகிகள் ஹேமந்த் குமாா், பெரியவிளை அ.கண்ணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
மக்கள் நீதி மையம் சாா்பில் மாவட்ட பொறுப்பாளா் சசி தலைமையில் நிா்வாகிகள் லாட்வின், மணிகண்டன், ஜோஸ், ஆன்றறனி டெலி, மூா்த்தி, கணேஷ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.