கன்னியாகுமரி அருகே மனவளா்ச்சி குன்றியோா் காப்பகத்திலிருந்து தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடி மருந்துவாழ்மலை அடிவாரத்தில் மனவளா்ச்சி குன்றியோா் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வியாழக்கிழமை பிற்பகல் உணவு அருந்தி கொண்டிருந்த நட்டாலம் கொல்லஞ்சி பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் மகன் மகேஷ் (30), திடீரென தப்பியோடிவிட்டாா்.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காப்பக நிா்வாகி மணிகண்டன் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் தப்பியோடிய மகேஷைத் தேடி வருகின்றனா்.