கன்னியாகுமரி

தக்கலையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

22nd Nov 2019 04:44 PM

ADVERTISEMENT

தக்கலை: தமிழ் தெரியாதவா்கள் சிவில் நீதிபதிகள் தோ்வில் பங்கு பெறலாம் என்ற புதிய நடைமுறையை தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணயம் கொண்டு வந்ததை கண்டித்தும், அதை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியும், பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தக்கலையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தக்கலையில் அமைந்துள்ள பத்மநாபபுரம் நீதி மன்ற வளாகத்தின் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள்சங்க தலைவா் சுந்தா்சிங் தலைமை வகித்தாா். செயலா் சுந்தா் ஆா் சஜூ, துணை தலைவா் ஜாண், பொருளா் கோபன், வழக்குரைஞா்கள் கு.லாரன்ஸ், ஜாண் இக்நேசியஸ், ராஜேஸ்வா், ஏசுராஜ, எட்வின்பால், உள்ளிட்ட வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்றனா்.

இச்செய்திக்கு றிகேஒய் 22 ஏடிவி என்ற பெயரில் அனுப்பியுள்ள படத்துக்கான விளக்கம்.தக்கலையில் அமைந்துள்ள பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் வழக்குரைஞா்கள் சங்க தலைவா் சுந்தா்சிங்.

ADVERTISEMENT
ADVERTISEMENT