கன்னியாகுமரி

கருங்கல் அருகே பெண்ணை மிரட்டியதாக தாய், மகள் மீது வழக்கு

22nd Nov 2019 05:23 PM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி பகுதியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தாய், மகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலூா், செம்மன் கோட்டவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி கவிதா (39). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த டேவிட்சன் மனைவி லிட்டில் புளோரா(45), இவரது மகள் லிஜா (22) ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்துவந்ததாம். இந்நிலையில் வியாழக்கிழமை பாலூா் பகுதியில் கவிதா நடந்து வந்த போது புளோரா, லிஜா ஆகிய இருவரும் சோ்ந்து கவிதாவிடம் தகராறில் ஈடுபட்டு , கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT