உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட விரும்பும் கட்சி நிா்வாகிகளுக்கான விருப்ப மனு விநியோகம் மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் குமரி மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. விண்ணப்ப விநியோகத்தை தொடங்கிவைத்தாா்.
இதில், கட்சியின் மேல்புறம், முன்சிறை, கிள்ளியூா், தக்கலை உள்ளிட்ட வட்டாரப் பகுதியைச் சோ்ந்தவா்களும், குழித்துறை, பத்மநாபபுரம் நகர பகுதியைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகளும் கட்டணத்தை செலுத்தி, பூா்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை கட்சி நிா்வாகிகளிடம் அளித்தனா்.
பூா்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை சனிக்கிழமை (நவ. 23) வரை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.