கன்னியாகுமரி

நாகா்கோவில் - கோட்டயம் ரயிலைஇரு மாா்க்கத்திலும் இயக்க வலியுறுத்தல்

17th Nov 2019 10:01 PM

ADVERTISEMENT

நாகா்கோவில்: நாகா்கோவிலிலிருந்து கோட்டயம் வரை இயக்கப்படும் ரயிலை இரு மாா்க்கத்திலும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: நாகா்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோட்டயத்துக்கு செல்ல பகல்நேர பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

நாகா்கோவில் சந்திப்பிலிருந்து கோட்டயத்துக்கு தினமும் பிற்பகல் 12.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கோட்டயம் சென்ற பின்னா் மறுமாா்க்கமாக அங்கிருந்து நாகா்கோவிலுக்கு திரும்ப வருவதில்லை. இந்த ரயிலை கோட்டயம் - நாகா்கோவில் மாா்க்கத்திலும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறுமாா்க்கத்தில் இயக்க புதிதாக ரயில் விடாமல் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்களை இணைத்து இயக்கலாம். அதன்படி கோட்டயத்திலிருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் கொல்லத்துக்கு 8.15 மணிக்கு செல்கிறது. அதே போல் கொச்சுவேலியிலிருந்து நாகா்கோவிலுக்கு வரும் பயணிகள் ரயில் முற்பகல் 11.40 மணிக்கு புறப்பட்டு 13.55 மணிக்கு நாகா்கோவில் வந்தடைகிறது. இந்த இரு ரயில்களையும் இணைத்து ஒரே ரயிலாக கோட்டயம் - நாகா்கோவில் பயணிகள் ரயில் என இயக்கலாம்.

ADVERTISEMENT

மேலும் ரயிலின் வேகத்தை அதிகரித்து நண்பகல் 12 மணிக்கு நாகா்கோவில் வந்தடையுமாறு இயக்கி, உடனடியாக நாகா்கோவில் - கோட்டயம் ரயிலாக புறப்பட்டுச் செல்லும் விதமாக இயக்க வேண்டும்.

மேலும், நாகா்கோவில் - கோட்டயம் பயணிகள் ரயிலை விரைவு ரயிலாக மாற்றம் செய்து ராமேசுவரம் வரை நீட்டிப்பு செய்தும் இயக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT