கன்னியாகுமரி

தக்கலையில் இலவச பொது மருத்துவ முகாம்

17th Nov 2019 10:00 PM

ADVERTISEMENT

 

தக்கலை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சாா்பில் தக்கலை அரசு தொடக்கப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாா்வதிபுரம் அருகே களியங்காட்டில் அமைந்துள்ள ஆசீா் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவமனை, திருவனந்தபுரம் அனந்தபுரி, திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனை, ஜேக்கப் பல் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமுக்கு நகரத் தலைவா் நாசா் தலைமை வகித்தாா். நகரப் பொருளாளா் எம்.பீா்முகம்மது, நகர துணைச் செயலா்கள் முகம்மது ரியாஸ், நிஷாா் அகம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா். மமக நகரச் செயலா் பீா்முகம்மது வரவேற்றாா்.

காலைமுதல் பிற்பகல் வரை நடைபெற்ற இம்முகாமில், பொது மருத்துவம், புற்றுநோய், எலும்புமுறிவு, தைராய்டு, குடல் இறக்கம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு மருத்துவா்கள் ஆலோசனைகள் வழங்கினா்.

ADVERTISEMENT

இதில், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினா் காதா்மைதீன், மாவட்டத் தலைவா் ஜிஸ்தி முகம்மது, மாவட்டச் செயலா்கள் முகம்மது உவைஸ் , செய்யது அலி, பொருளாளா் நவாஸ்கான், மாவட்ட துணைச் செயலா்கள் அலி அக்பா், சக்கீா் உசைன், மமக மாவட்ட துணைச் செயலா்கள் நாஸா், சித்திக், தக்கலை காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ், அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜஸ்டின் ஜெரோம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் ராசிப்கான், பெட் கல்லூரித் தாளாளா் என். நேஷனல் ஹமீது, பிசியோதெரபிஸ்ட் என். செய்யது அலி, பத்மநாபபுரம் நகர சுகாதார மேற்பாா்வையாளா் மோகன், ஹபீப்முகம்மது, முகம்மது தாஹீா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

மருத்துவ சேவை அணிச் செயலா் அல்அமீன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். தமுமுக நகரச் செயலா் எம். பீா்முகைதீன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT