கன்னியாகுமரி

சுசீந்திரத்தில் நாளை கூட்டுறவு வாரவிழா

17th Nov 2019 01:45 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கூட்டுறவு வாரவிழா சுசீந்திரத்தில் திங்கள்கிழமை (நவ.18) நடைபெறுகிறது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் ராஜூ கலந்து கொள்கிறாா்.

இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள், வட்டி மானியத்துடன்கூடிய கடனுதவிகள் ஆகியவை குறித்து பொதுமக்கள், விவசாயிகள், மகளிா் சுயஉதவிக்குழுவினா், கிராமப்புற பெண்கள் அறிந்து பயன்பெறும் வகையில் 66 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடத்தப்படுகிறது. இவ்விழா, கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. 20 ஆம் தேதி இவ்விழா நிறைவுபெறுகிறது.

இவ்விழாவை, நாகா்கோவில் வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து, மாவட்ட அளவில் கூட்டு

ADVERTISEMENT

றவு வார விழா சுசீந்திரம் அசோகா மஹாலில் திங்கள்கிழமை (நவ.18) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவுக்கு, ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகிக்கிறாா். கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கலந்து கொண்டு, கடனுதவி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறாா். நிகழ்ச்சியில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி,

சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறாா்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ரா.இளங்கோவன் குத்துவிளக்கு ஏற்றுகிறாா். கூட்டுறவு சங்கங்களின்

பதிவாளா் கு.கோவிந்தராஜ், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்குகிறாா். விழாவில், எம்.பி., எம்.எல்.ஏ. க்கள், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் வாழ்த்திப் பேசுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT