கன்னியாகுமரி

சாலை மறியல்: 2 எம்.எல்.ஏ.க்கள்உள்பட 308 போ் மீது வழக்கு

17th Nov 2019 10:00 PM

ADVERTISEMENT

களியக்காவிளை: களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 308 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை - நாகா்கோவில் - காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், நகா்ப்புற, கிராமப்புற சாலைகள் உள்பட சேதமடைந்து காணப்படும் அனைத்து சாலைகளையும் சீரமைக்கக் கோரி, களியக்காவிளை சந்திப்பில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், எம்.எல்.ஏ.க்கள் கிள்ளியூா் எஸ். ராஜேஷ்குமாா், விளவங்கோடு எஸ். விஜயதரணி உள்பட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். சிறிது நேரத்துக்குப் பின்னா் அவா்களை விடுவித்தனா்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமாா், விஜயதரணி உள்பட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் 308 போ் மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT