கன்னியாகுமரி

சாமிதோப்பிலிருந்து திருவனந்தபுரத்துக்குஅய்யா வைகுண்டா் பாதயாத்திரை

17th Nov 2019 10:04 PM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி: சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அய்யா வைகுண்டா் பாதயாத்திரை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அய்யா வைகுண்டசாமியை திருவிதாங்கூா் மன்னரின் படைகள் சாமிதோப்பில் இருந்து சிறைபிடித்து கால்நடையாக அழைத்துச் சென்றன. அந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் முதல் தேதி சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு பதி வரை அய்யாவழி பக்தா்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

நிகழாண்டு இந்த பாதயாத்திரை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, சாமிதோப்பு முத்திரிக் கிணற்றில் பதம் அருந்தி வழிபட்டு, அன்புவனத்தில் சிறப்பு பணிவிடைகளுடன் தொடங்கியது.

ADVERTISEMENT

பாலபிரஜாபதி அடிகளாா் தலைமை வகித்தாா். வளவன், ஆா்.தா்மரஜினி முன்னிலை வகித்தனா். கேரள நாடாா் மகாஜன சங்கத் தலைவா் அகிமோகன், சாமிதோப்பு ஊராட்சி முன்னாள் தலைவா் யு.தியாகராஜன், அய்யாவழி பக்தா்கள் செல்வராஜ், ரெத்தினமணி, கோபாலகிருஷ்ணன், பொன்.செல்வராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த பாதயாத்திரை நாகா்கோவில், தக்கலை, மாா்த்தாண்டம், களியக்காவிளை, பாறசாலை, நெய்யாற்றின்கரை, பாலராமபுரம் வழியாக வருகிற 22ஆம் தேதி திருவனந்தபுரம் சிங்கார தோப்புப் பதியை சென்றடைகிறது. அங்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையுடன், தான தா்மங்கள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT