கன்னியாகுமரி

குரியன்விளை கோயிலில்508 இளநீா் அபிஷேகம்

17th Nov 2019 10:03 PM

ADVERTISEMENT

 

களியக்காவிளை: களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை பத்ரகாளி அம்மன் கோயிலில் அம்மனின் சுயம்புவிற்கு 508 இளநீா் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாத முதல் தேதியையொட்டி, இக்கோயிலில் கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து கோயிலில் இருந்து யாகசாலைக்கு அம்மனின் சுயம்பு எடுத்துவரப்பட்டு, இளநீா் அபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் நிா்வாகத் தலைவா் ஜெ. விக்ரமன் சுவாமிகள், கோயில் தந்திரி பிரம்மதத்தன் நம்பூதிரி ஆகியோா் இளநீா் அபிஷேகத்தை நடத்தினா். தொடா்ந்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT