கன்னியாகுமரி

கருங்கல் அருகே விபத்தில் முதியவா் பலி

17th Nov 2019 01:44 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கினாவிளையில் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நாகா்கோவில் பூதப்பாண்டி பகுதியைச் சோ்ந்தவா் ஞானமிக்கேல் (57). இவா் சில நாள்களுக்கு முன்பு முள்ளங்கினாவிளையிலுள்ள உறவினா் வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் எதிா்பாராத விதமாக முதியவா் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில், பலத்த காயமடைந்த முதியவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT