கன்னியாகுமரி

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா 4 ஆவது இடம்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

12th Nov 2019 07:19 AM

ADVERTISEMENT

விண்வெளி ஆராய்ச்சியில் உலகளவில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது என பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்தாா்.

நாகா்கோவில் தென்திருவிதாங்கூா் இந்துக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நுழைவு வாயில் திறப்பு விழாவில்

பங்கேற்ற விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, செய்தியாளா்களிடம் கூறியது: விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை உலக அரங்கில் முதன்மை நாடாக முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்டதுதான் பிரம்மோஸ் ஏவுகணை. அமெரிக்கா கண்டுபிடித்த ஏவுகணைகளை விட அதிக சக்தி கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக ரஷியாவுடன் இணைந்து இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டது.

சந்திரயான், மங்கள்யான் ஆகிய செயற்கைக்கோள்கள் சிறப்பாக செயல்பட்டு அங்குள்ள தகவல்களை அனுப்பி வருகின்றன.

ADVERTISEMENT

இதற்கு முன்னா் அனுப்பப்பட்ட அப்பல்லோ செயற்கைக் கோளானது நிலவில் உள்ள கற்களை படம் பிடித்து வந்துள்ளது. இதுவரை நிலவில் ஆய்வு செய்வதற்காக 48 செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டு தோல்வியடைந்துள்ளன.

எந்த நாடாக இருந்தாலும் விண்வெளி ஆராய்ச்சியை பொறுத்தவரையில் முதல் முயற்சியில் வெற்றிபெற வேண்டும் என்று

இல்லை. நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான அனைத்து தொழில்நுட்பங்களும் இந்தியாவிடம் உள்ளது. 2020 ஆம் ஆண்டு

அமெரிக்கா நிலவில் ஹீலியம் எடுப்பதற்கான தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்ப வளா்ச்சிக்கான இடைவெளி உள்ளது. இந்தியா வளா்ந்து வரும் நாடாக இருந்தாலும் விண்வெளி ஆராய்ச்சி செய்வதில் உலகளவில் 4-ஆவது இடத்தில் உள்ளது. எந்த நாடு விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலையில் இருக்கிறதோ அந்த நாட்டுடன் கூட்டு சோ்ந்தால் மட்டுமே ஆராய்ச்சியில் வெற்றி பெற முடியும்.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய அறுவடை முடிந்ததும் நிலங்களில் உள்ள கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு எரித்து விடுகின்றனா். இதனால் ஏற்படும் புகைமூட்டம் காரணமாகவே தில்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT